மீண்டும் மேட்ச் ஃபிக்சிங் பண்ணிட்டாங்களா? சிக்கலில் சிஎஸ்கே அணி - கொதிக்கும் ரசிகர்கள்!
பஞ்சாப்-க்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்விக்கு மேட்ச் ஃபிக்சிங் நடந்ததாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேட்ச் ஃபிக்சிங்
நடப்பாண்டில் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த லீக் மேட்சான சிஎஸ்கே - பஞ்சாப் அணிகளுக்கான போட்டி சேப்பாக்கத்தில் நடந்தது. அதில் சிஎஸ்கே அணி படுத்தோல்வி அடைந்தது. இதற்கு மேட்ச் ஃபிக்சிங் செய்யப்பட்டது தான் காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணி, ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையும் மாற்றப்பட்டது. ரஹானே ஆட்டமிழந்த பின் டேரல் மிட்சல் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென சிவம் ததுபே வந்தார். தொடர்ந்து ஸ்பின்னர்களை விளாசும் துபே இம்முறை அவுட் ஆனது சந்தேகத்தை கிளப்பியது.
சிஎஸ்கே அணி
பிறகு ஜடேஜா இறங்கி சுமாரான ஆட்டத்தை ஆடினார். இதை அடுத்து, டேரல் மிட்சலை களமிறக்காமல், இம்பேக்ட் பிளேயராக சமீர் ரிஸ்வி வந்தார். ஏற்கனவே மிட்சல், தோனி, மொயின் அலி வரையில் இருக்கும் போது இம்பாக்ட் இறங்க அவசியம் இல்லை. இவ்வளவு சொதப்பலுக்கு பிறகு பவுலிங்கிலும் மேட்ச் ஃபிக்சிங் நடந்த வலுவான குற்றசாட்டு உள்ளது.
2 பந்துகளில் வீசிய நிலையில் தீபக் சஹர் காயம் காரணமாக ஓய்வறைக்கு சென்றார். இதுவரை தீபக் சஹர் நிலை குறித்து சிஎஸ்கே அணி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதேபோல் பதிரானா, துஷார் தேஷ்பாண்டே இருவரும் ஒரே போட்டியில் பெஞ்ச் செய்யப்பட்டதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
முன்னணி பவுலர்கள் 3 பேர் பெஞ்ச் செய்யப்பட்டது ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல ஷஷாங்க் சிங் கேட்சை லாங் ஆன் திசையில் இருந்த ருதுராஜ் எளிதாக பிடிக்காமல் மிட்சல் பிடிக்கட்டும் என காத்திருந்தது சந்தேகத்துக்குள்ளானது. இதனால் சிஎஸ்கே - பஞ்சாப் அணி போட்டியில் மேட்ச் ஃபிக்சிங் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.