காலில் ரத்தம் சொட்ட சொட்ட பீல்டிங் செய்த டூபிளசிஸ் - கதறும் ரசிகர்கள்
காலில் ரத்தம் வந்து கொண்டிருந்த போதிலும் அதை கண்டுகொள்ளாமல் பீல்டிங்கில் முழு கவனத்தையும் செலுத்திய டூபிளசிஸை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன. அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்துவிட்டு ஐந்தாவது பந்திலேயே ரன் அவுட்டானார்.
மற்றொரு துவக்க வீரரான வெங்கடேஷ் ஐயர் 18 ரன்களிலும், கேப்டன் இயன் மோர்கன் 8 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். சென்னையின் பந்துவீச்சை நிதானமான எதிர்கொண்டு நீண்ட நேரம் தாக்குபிடித்த ராகுல் த்ரிபாட்டி 45 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.
Dedication @faf1307 ???#WhistlePodu | #IPL2021 pic.twitter.com/cS3oPtONnz
— CSK Fans Army™ ? (@CSKFansArmy) September 26, 2021
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரியூ ரசல் 20 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், இறுதி வரை ஆட்டமிழக்காமல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ராணா 37 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் 11 பந்துகளில் 26 ரன்கள் குவித்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள கொல்கத்தா அணி 171 ரன்கள் எடுத்தது.
இந்தநிலையில், இந்த போட்டியில் காலில் ரத்தம் வந்து கொண்டிருந்ததை கூட கவனிக்காமல் சென்னை வீரர் டூபிளசிஸ், பீல்டிங்கில் முழு கவனத்தையும் செலுத்தி அதில் பிரமாதமாகவும் செயல்பட்டது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. ஒட்டுமொத்த ரசிகர்களும் டூபிளசிஸை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.