Friday, May 23, 2025

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் : காதலியை கரம்பிடித்த கிரிக்கெட் வீரர் ,வாழ்த்து தெரிவித்த CSK அணி

Chennai Super Kings IPL 2022
By Irumporai 3 years ago
Report

நியூசிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் டெவோன் கான்வே மூன்று வருடமாக காதலித்து வந்த கிம் வாட்சனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஐபிஎல் சீசன் 15-வது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது திருமணத்துக்காக ஐபிஎல் போட்டியில் இருந்து டெவோன் கான்வே விலகியுள்ளார்.

தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள டெவோன் கான்வே கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டார்.

இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இவர்களது இருவருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளனர்.