தோனி ஓய்வை அறிவிக்கிறாரா? CSK பயிற்சியாளர் பிளெமிங் சொன்ன பதில்
தோனி ஓய்வு பெறுவதாக பரவிய தகவலுக்கு CSK பயிற்சியாளர் பிளெமிங் பதிலளித்துள்ளார்.
தோனி ஓய்வா?
2025 ஐபிஎல் தொடரில், சென்னை அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியை தழுவி, புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
சென்னை அணியின் பேட்டிங் தொடர்ந்து சொதப்பி வருவதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக "தோனியின் உடல்நிலை முன்பு போல் இல்லை. அவரால் தொடர்ந்து 10 ஓவர்கள் விளையாட முடியாது" என பிளெமிங் கூறிய நிலையில், தோனி ஓய்வு பெற உள்ளாரா என்ற விவாதம் எழுந்தது.
இந்நிலையில், தோனியின் பெற்றோர் முதல்முறையாக தோனி விளையாடுவதை பார்க்க நேற்று மைதானத்திற்கு வருகை தந்தது இதனை உறுதிப்படுத்துவது போல் இருந்தது.
பிளெமிங் பதில்
இதனால், நேற்றைய போட்டி முடிந்த பின்னர் தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என பலரும் பேசி வந்தனர். ஆனால் தோனி அவ்வாறு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இது குறித்து போட்டி முடிந்த பின்னர் பேசிய CSK அணியின் பயிற்சியாளர் பிளெமிங், "தோனியின் ஓய்வு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் அவரோடு இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
நான் அவருடன் வேலை பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன், அவர் இன்னும் வலிமையாக தான் இருக்கிறார். அது பற்றி யாருமே அவரிடம் கேட்பதில்லை" என தெரிவித்துள்ளார்.