சிஎஸ்கே அணியில் இருந்து டூபிளசிஸ் விலகல்: கலக்கத்தில் தோனி- ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான டூபிளசிஸ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட இந்த வருட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வைத்து நடத்தப்பட உள்ளது.

செப்டம்பர் 19ம் தேதி இந்த தொடர் துவங்க உள்ள நிலையில், ஒவ்வொரு அணி வீரர்களும் துபாய்க்கு படையெடுத்து வருகின்றனர்.

அதே போல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியும் வருகின்றனர்.

அதே போல் துபாய் சென்றுள்ள வீரர்கள் ஐபிஎல் தொடருக்காக தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக அந்த அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான டூபிளசிஸ் காயம் காரணமாக விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெஸ்ட் இண்டீஸில் தற்போது நடைபெற்று வரும் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் லூசியா அணியை வழிநடத்தி வரும் டூபிளசிஸ், இந்த தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னதாக காயமடைந்தார்.

இதனால் அரையிறுதி போட்டியில் இருந்தும் டூபிளசிஸ் விலகியுள்ளார். டூ பிளஸியின் காயத்தின் தன்மை சற்று பெரிய அளவில் இருப்பதால், அவர் ஐபிஎல் 14ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்பது கடினம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. டூ பிளஸி விரைவில் இதுகுறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை டூபிளசிஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்