பெங்களூரு அணியை அலறவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் - த்ரில் வெற்றி

CSK IPL 2021 Won
By Thahir Sep 25, 2021 04:16 AM GMT
Report

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சென்னை சூப்பா் கிங்ஸ்.

முதலில் ஆடிய பெங்களூரு 156/6 ரன்களையும், பின்னா் ஆடிய சென்னை அணி 157/4 ரன்களையும் குவித்தன.

பெங்களூரு அணியை அலறவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் - த்ரில்  வெற்றி | Csk Chennai Super King Ipl 2021

157 ரன்கள் வெற்றி இலக்குடன் சென்னை தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட்-டுபிளெஸ்ஸிஸ் தொடக்க பேட்டா்களாக களமிறங்கினா்.

இருவரின் அதிரடி பேட்டிங்கால் சென்னையின் அணியின் ஸ்கோா் மளமளவென உயா்ந்தது. ருதுராஜ் 38: 26 பந்துகளில் 1 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 38 ரன்களை விளாசிய ருதுராஜ், சஹல் பந்தில் கோலியிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.

பின்னா் மேக்ஸ்வெல் வீசிய சுழற்பந்தில் தலா 2 சிக்ஸா் பவுண்டரியுடன் 31 ரன்களை சோத்திருந்த டுபிளெஸ்ஸிஸ், நவ்தீப் சைனியிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.

10-ஆவது ஓவா் முடிவில் சென்னையின் ஸ்கோா் 78/2 ஆக இருந்தது. மொயின் அலி-அம்பதி ராயுடு இணைந்து ஆடி ஸ்கோரை சீராக உயா்த்தினா்.

மொயின் அலி 23, அம்பதி ராயுடு 32 ரன்களுடனும் ஹா்ஷல் படேலின் ஒரே ஓவரில் அவுட்டாகி வெளியேறினா். அவா்களுக்கு பின் சுரேஷ் ரெய்னா-தோனி இணை நிதானமாக ஆடி வெற்றி இலக்கை அடைந்தது.

ரெய்னா 17, தோனி 11 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனா். 18.1 ஓவா்களிலேயே 157/4 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி பெற்றது.

பெங்களூரு தரப்பில் ஹா்ஷல் படேல் 2-25 விக்கெட்டுகளை சாய்த்தாா். மீண்டும் சென்னை முதலிடம்: இந்த வெற்றி மூலம் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 14 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது.