இறுதி போட்டியில் சென்னை அணியுடன் மோதும் அணி இது தான் வெளியான முக்கிய தகவல்

MS Dhoni CSK IPL 2021 Chennai Super Kings
By Thahir Sep 15, 2021 02:22 AM GMT
Report

இந்த வருட ஐபிஎல் டி.20 தொடரின் இறுதி போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் தான் தகுதிபெறும் என முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட இந்த வருட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வைத்து நடத்தப்பட உள்ளது. செப்டம்பர் 19ம் தேதி இந்த தொடர் துவங்க உள்ளது.

இறுதி போட்டியில் சென்னை அணியுடன் மோதும் அணி இது தான் வெளியான முக்கிய தகவல் | Csk Chennai Super King Ipl 2021

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் இந்த தொடருக்காக காத்திருப்பதால், முன்னாள், இந்நாள் வீரர்களும் ஐபிஎல் தொடர் குறித்தான தங்களது எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் சிலர் தங்களது கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து வரும் முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, எதிர்வரும் ஐபிஎல் டி.20 தொடரின் இறுதி போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் தான் தகுதிபெறும் என தெரிவித்துள்ளார்.

ரசிகர் ஒருவர் ஆகாஷ் சோப்ராவிடம் உங்கள் பார்வையில், எந்த எந்த அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறும் என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு ஆகாஷ் சோப்ரா அளித்துள்ள பதிலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் தான் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என தெரிவித்துள்ளார்.

 டி.20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் 4 அணிகள்;

ஆகாஷ் சோப்ராவிடம் மற்றொரு ரசிகர் ஒருவர், டி.20 உலகக்கோப்பை தொடரில் எந்த எந்த அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஆகாஷ் சோப்ரா, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நான்கு அணிகள் தான் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் என தெரிவித்துள்ளார்.