வணக்கம் சென்னை மக்களே..கொரோனா தடுப்பூசி போட்டுக்கோங்க - சிஎஸ்கே அணி வீரர்கள் வேண்டுகோள்
சென்னையில் நாளை நடைபெறவுள்ள சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக தமிழ்நாடு முழுவதும் நாளை 10,000 முகாம்கள் நடத்தி கொரோனா தடுப்பூசி போட தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரண்டாம் டோஸ் செலுத்தக்கூடியவர்கள் என அனைத்து தரப்பினரும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் இந்த முகாம் பெரியளவில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் ஆயிரத்து 600 முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் ஒவ்வொரு மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் விரைவான நடவடிக்கை எடுத்து வருகிறது. தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துபாயில் உள்ள சிஎஸ்கே வீரர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி வீரர்கள் ஜெகதீசன், சாய் கிஷோர் மற்றும் ஹரி நிஷாந்த் ஆகியோர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
This is Your Shot at Safety!
— Chennai Super Kings - Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) September 10, 2021
Anbuden requesting you to take the vaccine this Sunday!#GetVaccinated #WhistlePodu ? @chennaicorp pic.twitter.com/Kw4rqFsgYD