மீண்டும் களமிறங்கும் பந்துவீச்சாளர்: விசில் அடிக்க காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்

CSK IPL 2021 Chennai Super Kings
By Thahir Aug 21, 2021 02:50 PM GMT
Report

இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஜோஷ் ஹேசல்வுட் ஆனால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாது என்று கூறி வெளியேறினார்.

பின்னர் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேசன் பெஹ்ரான்டாஃப் மாற்று வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் பின்னர் கொரோனா அதிகமான காரணத்தினால் ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்பொழுது செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.

மீண்டும் களமிறங்கும் பந்துவீச்சாளர்: விசில் அடிக்க காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் | Csk Chennai Super King Ipl 2021

இந்நிலையில் தற்பொழுது மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஜோஷ் ஹேசல்வுட் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட தயாராக உள்ளார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விசுவநாதன் கூறியுள்ளார்.

பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மிக சிறப்பாக விளையாடிய ஜோஷ் ஹேசல்வுட்

சமீபத்தில் பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டிகளில் மொத்தமாக 8 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை ஜோஷ் ஹேசல்வுட் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

மீண்டும் களமிறங்கும் பந்துவீச்சாளர்: விசில் அடிக்க காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் | Csk Chennai Super King Ipl 2021

இந்த 8 போட்டிகளில் அவருடைய பௌலிங் எக்கானமி 6.55 ஆக மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. மிகச்சிறந்த பார்மில் இருக்கும் அவர் தற்பொழுது மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாட தயார் என்று கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது இவர் மீண்டும் விளையாட தொடங்கினால், இவருக்கு மாற்று வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேசன் பெஹ்ரான்டாஃப்பை சென்னை அணி வெளியிட வேண்டும்.

சென்னை அணி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. கடந்த ஆண்டு ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களை ஏமாற்றியது.  

ஆனால் தற்பொழுது 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல் ரவுண்டர்கள் மொயின் அலி மற்றும் ரவீந்திர ஜடேஜா அணி சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

மீண்டும் களமிறங்கும் பந்துவீச்சாளர்: விசில் அடிக்க காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் | Csk Chennai Super King Ipl 2021

மேலும் ருத்ராஜ் மற்றும் ஃபேப் டு பிளேசிஸ் மிக சிறந்த பார்மில் உள்ளனர். பந்து வீச்சைப் பொறுத்தவரையில் சாம் கரன், தீபக் சஹர், லுங்கி இங்கடி மிக சிறப்பாக பந்துவீசி வரும் நிலையில் தற்பொழுது ஜோஷ் ஹேசல்வுட் அணிக்கு இன்னும் பலம் கொடுக்க போகிறார். எனவே சென்னை அணி பலம் மிக்க அணியாக மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடதக்கது.