இந்த ஆண்டோடு IPL போட்டியில் இருந்து விடை பெறுகிறாரா தல தோனி? ரசிகர்கள் அதிர்ச்சி..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ள தோனி,இந்த வருட ஐபிஎல் தொடருடன் தனது ஓய்வை அறிவிப்பாரா என்ற விவாதத்திற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளக்கம் கொடுத்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் தோனியை ஏலம் எடுக்க முயன்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக விலை கொடுத்த ஏலம் எடுத்தது.
தன் மீது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வைத்துள்ள நம்பிக்கையையும்,ரசிகர் ஏமாற்ற கூடாது என்ற அடிப்படையில் தோனி 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றின் மிக முக்கிய நாயகனான தோனி இன்னும் ஓரிரு வருடங்கள் மற்றும் கிரிக்கெட் விளையாட முடியும் என்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திடீரென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தோனியின் இந்த திடீர் முடிவு சென்னை ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தாலும், சென்னை அணியின் முன்னேற்றத்திற்கு இந்த முடிவு சரியானது தான் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே போல் கேப்டன் பதவியில் இருந்து விலகி, கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் கொடுத்துவிட்டதால், தோனி இந்த வருட ஐபிஎல் தொடருடன் ஓய்வையும் அறிவித்து விடுவார் என்றே பெரும்பாலான முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், தோனி இந்த வருட ஐபிஎல் தொடருடன் ஓய்வை அறிவிக்க வாய்ப்பு இல்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.