ரஜினியின் கபாலி போஸை காபி செய்தேன்- கேப்டன் தோனி

MS Dhoni IPL 2023
By Irumporai Apr 21, 2023 05:52 AM GMT
Report

சென்னை அணி கேப்டன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினி அவர்களின் போஸையாவது காபி செய்யும் எண்ணத்தில் அந்த போஸ் ஓடுத்தேன் என்று கூறினார்.

கபாலி போஸ்  

சென்னை அணி கேப்டன் சமீபத்தில் கோட் போட்டு அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதேபோல் போஸ் கொண்ட புகைப்படம் ஒன்று ரஜினியின் கபாலி படத்தில் இடம்பெற்றிருக்கும். அதனால் சமீபத்தில் அவர் பேட்டி அளிக்கும்போது ஒருவர் இதுபற்றி கேட்ட பொழுது அவர் சுவாரசியமான பதிலை கூறினார்.

ரஜினி பற்றி தோனி  

அதனால் அந்த கேள்விக்கு தோனி, ரஜினியை போல் சிந்திப்பதும் நடிப்பதும் மிக கடினமானது எனவும், அதனால் அவரது போஸை ஆவது காபி செய்யும் எண்ணத்தில் அந்த புகைப்படத்தை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.