ஓய்வு குறித்து சூசகமாக அறிவித்த தோனி - சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

MS Dhoni Chennai Super Kings
By Irumporai Apr 22, 2023 03:08 AM GMT
Report

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் உள்ளேன் என ஓய்வு குறித்து தோனி கூறியிருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே  

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாகத்தில் ஐதராபாத் - சென்னை அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த 134 ரன்கள் எடுத்தது.

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.

3வது இடம்

அணியின் ஸ்கோர் 87 ஆக இருந்தபோது 35 ரன்கள் எடுத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் ரன் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த அஜிங்யா ரஹானே மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் தலா 9 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

ஓய்வு குறித்து சூசகமாக அறிவித்த தோனி - சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் | Csk Captain Ms Dhoni Speak About Retiremen

விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் தொடக்க வீரர் டெவோன் கான்வே சிறப்பாக விளையாடி 77 ரன்கள் குவித்தார். 18.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி வெற்றி இலக்கை எட்டியது.இதன் மூலம் சென்னை அணி இந்த தொடரில் 4வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது.

தோனி  

போட்டி முடிந்த பின்னர் பேசிய சென்னை அணி கேப்டன் தோனி, என் கிரிக்கெட் வாழ்வில் கடைசி கட்டம் இது. அதை மகிழ்ச்சியாக கடப்பது முக்கியமானது. சென்னைக்கு வருவது மிகவும் மகிழ்ச்சி. ரசிகர்கள் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். என் பேச்சை கேட்க சென்னை ரசிகர்கள் கடைசி வரை இருக்கின்றனர்" என்றார். அவரது பேச்சு தோனி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.