எனக்கு எல்லாமே தெரியும்… மொத்தமா திருப்பி கொடுக்க போறாங்க : சேன் வாட்சன் கருத்து

Shane Warne Chennai Super Kings
By Irumporai Mar 30, 2023 02:35 PM GMT
Report

அவுங்கள பத்தி எனக்கு எல்லாமே தெரியும்… இந்த வருசம் மொத்தமா திருப்பி கொடுக்க போறாங்க; சென்னை சூப்பர் கிங்ஸ் குறித்து பேசிய சேன் வாட்சன் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடர் 

இந்த வருட ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தற்போதைய துணை பயிற்சியாளருமான சேன் வாட்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் நிச்சயம் சிறப்பாக செயல்படும் என தெரிவித்துள்ளார்.

எனக்கு எல்லாமே தெரியும்… மொத்தமா திருப்பி கொடுக்க போறாங்க : சேன் வாட்சன் கருத்து | Csk Bounce Back Delhi Capitals Shane Watson

வாட்சன் கருத்து

இது குறித்து சேன் வாட்சன் பேசுகையில், கடந்த தொடரில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த சென்னை அணி, இந்த தொடரில் நிச்சயமாக முழு பலத்துடன் தோல்வியில் இருந்து மீண்டு வரும். இது அவர்களுக்கு புதிதல்ல. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகமான சிறந்த வீரர்கள் உள்ளனர், குறிப்பாக தோனியும், ஸ்டீபன் பிளமிங்கும் இருப்பதே சென்னை அணியின் மிகப்பெரும் பலம்.

இந்த வருடத்திற்கு தேவையான திட்டங்களை நிச்சயம் வகுத்திருப்பார், இதில் எனக்கு எவ்வித சந்தேகமும், அவர்களை பற்றி எனக்கு நன்கு தெரியும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான் விளையாடிய மூன்று வருடங்களும் என் மனதிற்கு மிக நெருக்கமானவை” என்று தெரிவித்தார்