‘’ முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா ‘’ : பாச மழையில் சி.எஸ்.கே ஆர்.சி.பி. வீரர்கள் வைரலாகும் வீடியோஸ்

csk rcb viralvideos
By Irumporai Apr 12, 2022 10:14 AM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணியின் வீரர்கள் நட்பாக இருக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து நான்கு தோல்விகளை கண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இன்று இரவு மோதுகின்றன.

முந்தைய சீசன்களில் சிஎஸ்கேவின் பேட்டிங் தூணாக இருந்த ஃபாப் டூப்ளசிஸ் மற்றும் பவுலிங் தூணாக இருந்த ஹேசில்வுட் இருவரும், ரவீந்திர ஜடேஜாவின் மஞ்சள் படையை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், இவர்கள் அனைவரும் இன்று மும்பை மைதானத்தில் பயிற்சிக்காக சென்றுள்ளனர்.

அப்படி சென்றவர்களில் ஃபாப் டூப்ளசிஸ் மற்றும் ஹேசில்வுட் உள்ளிட்ட வீரர்கள் சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா, உத்தப்பா, பிராவோ, தோனி உள்ளிட்டோரை ஓடிச் சென்று ஆரத்தழுவினார்கள். அனைவரும் சிரித்த முகத்துடன் அளவளாவி பேசி சிறிது நேரம் மகிழ்ந்தனர்.

இந்த நெகிழ்ச்சியான வீடியோவை சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. இதேபோல் தோனியை ஒருபுறம் விராட் கோலியும், மற்றொரு புறம் ஃபாப் டூப்ளசிஸ் ஆகியோர் கட்டியணைத்திருந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. இவையாவும் ரசிகர்களையும் குஷிக்குள்ளாக்கியுள்ளது.