அதிரடி ஆட்டம்.. ப்ளே ஆப்க்கு முன்னேறிய சிஎஸ்கே, லக்னோ அணிகள்

Chennai Super Kings IPL 2023
By Irumporai May 21, 2023 02:36 AM GMT
Report

நேற்றைய ஐபிஎல் லீக் போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ அணியும் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

 ஐபிஎல் போட்டி

ஐபிஎல் 16வது சீசனில் லீக் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. அணிக்கு தலா 14 போட்டிகள் என்ற கணக்கில் 14வது போட்டி வரை ப்ளே ஆப்க்கு தகுதி பெறும் அணிகள் குறித்த இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

 ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்

நேற்று பிற்பகல் நடந்த போட்டியில் டெல்லி அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு இரண்டாவது அணியாக தகுதி பெற்றது.

அதிரடி ஆட்டம்.. ப்ளே ஆப்க்கு முன்னேறிய சிஎஸ்கே, லக்னோ அணிகள் | Csk And Lsg Going To Playoff In Ipl 2023

அதை தொடர்ந்து மாலையில் நடந்த லக்னோ , கொல்கத்தா அணிகள் இடையேயான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்ற லக்னோ அணி 3வது அணியாக ப்ளே ஆப்க்கு தகுதி பெற்றுள்ளது.