‘’பிட் காயின் , கிரிப்டோ கரன்சி செல்லாது , செல்லாது ‘’ - திட்டவட்டமாக கூறிய மத்திய அரசு

cryptocurrency BitCoin LokSabha
By Irumporai Nov 29, 2021 08:06 AM GMT
Report

உலக பங்குச் சந்தைகள் முதலீட்டில் இந்த ஆண்டு மீண்டும்  பிட்காய்ன்கள் மற்றும் கிரிப்டோ கரன்சிகள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. உதாரணமாக, பிட்காய்ன் மதிப்பு ஒரு யூனிட்டின் மதிப்பு ரூ.16 லட்சத்தை (22 ஆயிரம் டாலர்கள்) எட்டியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் இது அதிகபட்ச  வளர்ச்சி என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர், அதே சமயம் இந்தியாவில் பிட்காய்ன்கள் மற்றும் கிரிப்டோ கரன்சிகள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளைத் தடைசெய்யவும் ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்கவும் புதிய சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய இந்திய அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிட் காயினை பணமாக அங்கீகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய நிதியமைச்சகம் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.