என் அம்மா அழுதுட்டாங்க! சொந்தமாக கார் வாங்கிய குக் வித் கோமாளி புகழ்- வைரல் புகைப்படங்கள்

television car Comali
By Jon 1 வருடம் முன்

டிவி நிகழ்ச்சிகளிலேயே அதிகளவு TRP -யுடன், எந்தவித நெகட்டிவ் விமர்சனங்களும் இல்லாத நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். கோமாளிகளை சமாளித்து குக்-குகள் எப்படி சமையலில் அசத்துகிறார்கள் என்பதே ஒன்லைன் கான்செட். தற்போது வரை அதிகளவான ரசிகர்களுடன் குக்-குகள் பிரபலமானோர்களோ இல்லையோ, இதில் வரும் கோமாளிகளுக்கு வரவேற்பு அதிகம்.

அவர்களுக்கென்று தனி ஆர்மி பக்கமும், ரசிகர் பக்கங்களும் கூட உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோமாளியாக இருந்து வரும் புகழுக்கு குக் வித் கோமாளி மூலமாக எக்கச்சக்க ரசிகர்கள் கிடைத்து இருக்கிறார்கள். சமீபத்தில் இவர் சொந்தமாக கார் வாங்க, ரசிகர்கள் தாங்களே வெற்றியடைந்தது போல் கொண்டாடி வருகின்றனர்.

அவர் வெளியிட்ட வீடியோவில், என் குடும்பத்தில் சித்தப்பா, மாமா எல்லோருமே டிரைவர் தான், நானும் கிளீனிங் வேலைக்கு சென்றதற்கு எல்லாரும் எதிர்த்தார்கள். இருந்தாலும் அந்த வேலையை செய்தேன், தற்போது நானே ஒரு காருக்கு ஓனராகி இருக்கிறேன், இதை என் அம்மாவிடம் கூறியதும் அழுதுவிட்டார்கள். நண்பர்கள் கட்டியணைத்து பாராட்டினர், இதற்கெல்லாம் ரசிகர்கள் ஆகிய நீங்கள் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.