ஆமைக்கறியை ஒழுங்காக சமைக்காத மனைவி - கணவன் செய்த கொடூரம்
ஒடிசாவில், மனைவி ஆமைக்கறியை ஒழுங்காக சமைக்காததால் அவரைக் கொன்று கணவர் வீட்டின் பின்புறம் புதைத்துள்ளார்.
ஆமைக்கறியால் நிகழ்ந்த கொடூரம்
ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள ரூட்பரா கிராமத்தில் ரஞ்சன் என்பவர், தன் மனைவியுடன் நடந்த வாக்குவாதத்தில் அவரைக் கொன்றுள்ளார்.
சம்பவத்தன்று ரஞ்சன் ஆமை ஒன்றைக் கொண்டுவந்து மனைவியை சமைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் மனைவி ஆமையை சமைக்கும்போது கருகியுள்ளது, ஏற்கனவே குடிபோதையில் இருந்த ரஞ்சன் இதனால் ஆத்திரமடைந்து தன் மனைவியை பலமாக தாக்கியதில் அவர் இறந்துள்ளார்.
இதனை மறைப்பதற்கு ரஞ்சன், இறந்த மனைவியின் உடலை வீட்டின் பின்புறமாக புதைத்து விட்டு மனைவியைக் காணவில்லை என்று அக்கம் பக்கத்தினருடனும், மனைவியின் தாயிடமும் நாடகமாடியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ரஞ்சனை கைது செய்து விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வந்தனர்.