5 வயது குழந்தை.. கொளுத்தும் வெயில்.. கட்டிப்போட்ட கொடூரத் தாய்! ஏன்?
கொளுத்தும் வெயிலில் தனது 5 வயது பெண் குழந்தைக்கு தாய் ஒருவர் கொடுத்த தண்டனை அதிர்ச்சியை தந்துள்ளது.
டெல்லி
டெல்லியில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. வீட்டுப் பாடம் செய்யாத அந்த குழந்தையின் கை, கால்களைக் கட்டி கொளுத்தும் மொட்டை மாடி வெயிலில் போட்டுள்ளார்.
வெயில் அதிகரித்ததால் அந்த சிறுமி சுருண்டு படுத்துள்ளார். நேரம் ஆக ஆக சிறுமியால் வெப்பத்தை தாள முடியாததால் அவர் அழுதுள்ளார்.
தாய் மீது நடவடிக்கை
இதனால் சப்தம் கேட்டு பக்கத்தில் இருந்த சிறுமியின் மாமா சுனில் உள்ளிட்ட உறவினர்கள் ஓடி சென்று சிறுமியின் கட்டுகளை அவிழ்த்து அவரை கீழ் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தை தூரத்தில் இருந்து வீடியோ எடுத்த ஒருவர், சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
25 நிமிடங்களாக வெயிலின் கொடுமை தாங்காமல் கதறும் அந்த குழந்தையின் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
டெல்லி ஹசுரி ஹாஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததை போலீஸார் கண்டு பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தையை துன்புறுத்திய தாய் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.