தீபாவளியையொட்டி இறைச்சிக்கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
Diwali
Chennai
By Thahir
தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள இறைச்சிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு வீட்டிற்கு வரும் குடும்ப உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அசைவ உணவுகள் தயார் செய்து கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காலை முதல் கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இறைச்சிகளை வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இறைச்சிகளை வாங்கி செல்கின்றனர்.