InD Vs Aus டெஸ்ட் போட்டியின்போது ‘இந்தியா... இந்தியா...’ என்று கத்த சொன்ன கோலி ... - வீடியோ வைரல்...!
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியின்போது, ‘இந்தியா... இந்தியா...’ என்று கத்த சொன்ன விராட் கோலியின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சமீபத்தில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இதனையடுத்து, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்தது. இப்போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
‘இந்தியா... இந்தியா...’ என்று கத்த சொன்ன கோலி
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியின்போது, 'RCB.. RCB' என்று ரசிகர்கள் கூச்சலிட்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது, ரசிகர்களை பார்த்து அப்படி கூச்சல் போடாதீங்க... இந்தியா.. என்று சொல்லுங்கள் என்று சைகை காட்டினார். இதைப் பார்த்ததும் ரசிகர்கள் இந்தியா... இந்தியா... என்று கத்தி ஆரவாரம் செய்தனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து வைரலாக்கி வருகின்றனர்.
Crowd was chanting 'RCB, RCB' - Virat Kohli told to stop it and chant 'India, India'. pic.twitter.com/kMd53wbYRU
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 20, 2023