பேச வந்த முதல்வர் - மோடி மோடி என கோஷம்..! கையசைத்து சிக்னல் செய்த பிரதமர்..!
திருச்சி விமான நிலைய முனையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் முதல்வர் பேச வந்த நிலையில், மோடி மோடி என பலரும் கோஷமிட்டனர்.
திருச்சி முனையம்
புதியதாக கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய முனையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்துள்ளார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின், விமான நிலைய நிகழ்ச்சி சென்றுள்ளார் பிரதமர் மோடி.
சைகை காட்டிய மோடி
நிகழ்ச்சியில் முனையத்தை திறந்து வைப்பதற்கு முன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அவர்களை தொடர்ந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சிறப்புரையாற்ற வந்த நிலையில், கூட்டத்தில் இருந்தவர்கள் மோடி மோடி என முழக்கமிட்டனர்.
அப்போது பிரதமர் மோடி, அவர்களிடத்தில் கையசைத்து அமைத்து காக்கும் படி சைகை செய்தார். இந்த சம்பவம் அங்கு சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.