மாஞ்சா நூலில் சிக்கிதவிப்பு - பறக்க முடியாமல் கண்கலங்கும் காகம்!
rescue
crow
fire service
By Anupriyamkumaresan
சென்னையில் மாஞ்சா நூலில் சிக்கிக் கொண்டு பறக்க முடியாமல் தவித்த காகத்தை தீயணைப்பு துறையினர் மீட்ட மனித நேயமிக்க வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை தேனாம்பேட்டை திருவள்ளுவர் தெருவில் உள்ள ஒரு மரத்தில் காகம் ஒன்று தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது. அதனை அவ்வழியே காரில் சென்ற பிரபு என்பவர் கண்டதும், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து 6 வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மாஞ்சா நூலை அறுத்து காகத்தை பத்திரமாக மீட்டனர்.
பின்னர் அதற்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி சுதந்திரமாக பறக்கவிட்டனர்.