காகங்கள் மனிதனை பழிவாங்குமா? ஆய்வில் வெளியான அதிர வைக்கும் தகவல்
காகங்களுக்கும் பழி வாங்கும் குணம் உள்ளது என ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பழி தீர்த்தல்
பொதுவாக மனிதர்கள் தங்களுக்கு தீங்கு இழைத்தவர்களை பழி வாங்க நினைப்பார்கள். பழி தீர்க்கும் வரை மனதில் அந்த கோபத்தை வைத்திருப்பார்கள்.
ஆனால் மனிதர்களைப் போல் பறவைகளுக்கும் நினைவில் வைத்து பழிவாங்குமா? என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.
பழி வாங்கும் காகம்
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் பேராசிரியர் ஜான் மார்ஸ்லஃப் காகங்களை வைத்து இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். 2006 ஆம் ஆண்டு குறிப்பிட்ட முகமூடி ஒன்றை அணிந்து, 7 காகங்களை வலை வைத்து பிடித்து கூண்டில் அடைத்துள்ளார். அடையாளத்திற்காக அவற்றின் இறக்கைகளில் படம் ஒன்றை வரைந்துள்ளார்.
அதன் பின்னர் எதுவும் செய்யாமல் அவற்றை விடுவித்தார். அதன் பின்னர் அந்த குறிப்பிட்ட முகமூடியை அணிந்து அவர் கல்லூரிக்கு செல்லும் போது எல்லாம் காகங்கள் அவரை பின்தொடர்ந்து தாக்கியுள்ளன. இதில் அவர் அடையாளமிடாத காகங்களும் அவரை தாக்கியுள்ளன. 2013 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தாக்குதல் குறைந்துள்ளது. ஆனால் முழுவதுமாக நின்றுவிடவில்லை.
கடந்த செப்டம்பரில் அந்த மாஸ்க் அணிந்து வெளியே செல்லும் போது எந்த காகமும் தாக்கவில்லை. இதன் மூலம் காகங்கள் 17 வருடங்கள் வரை நினைவு வைத்து கொள்கிறது. மனிதர்களுக்கு உள்ளது போல் கோபம் போன்ற உணர்வுகள் காகங்களுக்கு உள்ளது. மேலும் காகங்கள் தனக்கு ஏற்பட்ட தீங்கை மற்ற காகங்களுக்கு கடத்துகின்றன என தனது ஆய்வை வெளியிட்டுள்ளார்.