தொடர்ச்சியாக இறக்கும் காகங்கள்! வைரஸ் தொற்று உறுதி
சென்னையில் கடந்த சில நாட்களாக காகங்கள் உயிரிழந்து வரும் நிலையில் அவைகளுக்கு H5N1 வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் தொடர்ச்சியாக காகங்கள் உயிரிழந்தன.
இதனையடுத்து காகங்களின் மாதிரிகளை சேகரித்து கால்நடை நோயத்தடுப்பு புலனாய்வு குழுவினர் போபாலில் உள்ள தேசிய விலங்குகள் நோய் கட்டுப்பாட்டு ஆய்வு நிறுவனத்திடம் அனுப்பினர்.

இந்த சோதனைகளின் முடிவில், உயிரிழந்த காகங்களுக்கு (H5N1 வைரஸ்) தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது.
H5N1 வைரஸ் மனிதர்களுக்கு பரவும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க தமிழக தலைமை செயலருக்கு மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், இறந்த பறவைகளை கையால் தொட வேண்டும், உயிரிழந்த காகங்களை 8 முதல் 10 அடி ஆழத்தில் புதைக்க அல்லது எரிக்க வேண்டும். கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
