அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி இழப்பு - கமல்ஹாசன்
அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி வருமானம் இழப்பு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவாகவே நேரம் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
திமுக, அதிமுக, மநீம, அமமுக தலைமையிலான கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் என ஐந்து முனை போட்டி நிலவி வருகிறது. மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளன. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இன்று டெல்டா மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் கமல்ஹாசன், :அரசியல் விளையாட்டுக்கு வந்ததால் ரூ.300 கோடி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை ஊழல் செய்தவர்கள் ஜெயிலுக்கு சென்றாலும் ஷாப்பிங் செய்யும் அளவிற்கு வசதியாக உள்ளனர்” என விமர்சித்துள்ளார்.