வைக்கோல்போருக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி: எம்எல்ஏ டிரைவரின் வீட்டில் சிக்கியது என்ன?
மணப்பாறை அதிமுக வேட்பாளரான ஆர்.சந்திரசேகரிடம் பணியாற்றும் டிரைவரின் வீட்டின் அருகிலுள்ள வைக்கோல்போரிலிருந்து 1 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மணப்பாறை தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் ஆர்.சந்திரசேகர், இவரது நிறுவனத்தில் ஜேசிபி ஓட்டுநராக அழகர்சாமி, முருகானந்தம் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
இவர்களது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர், அத்துடன் எம்எல்ஏ தொகுதி நிதியில் நடைபெறும் பணிகளுக்கான ஒப்பந்ததாரர் தங்கபாண்டியன் என்பவரது வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் இருவரது வீட்டிலும் எதுவும் கிடைக்காத நிலையில், அழகர்சாமி வீட்டின் அருகிலுள்ள வைக்கோல்போருக்குள் 1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அவரது வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில், 500 ரூபாய் கட்டுகளாக சுமார் 1 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து விடிய விடிய அழகர்சாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.