ரூ.100 கோடி ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்கும் சிபிஐ: மகாராஷ்டிரா அரசுக்கு நெருக்கடி
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சியான பாஜக தொடர்ந்து மகாராஷ்டிரா அரசுக்கு மத்திய அரசு மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறது. பாஜக உடன் கூட்டணி வைத்து தேர்தலில் வென்ற சிவசேனா அதற்குப் பின்னர் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் சமீபத்தில் மும்பை கமிஷ்னர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட பரம்பிர் சிங் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ரூ.100 கோடி வரை மாதம் ஊழல் செய்ய தன்னை வற்புறுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதே குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம் அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.