3.63 மீ நீளமுள்ள கொலைகார முதலை - சுட்டுக்கொன்று சமைத்து சாப்பிட்ட பொதுமக்கள்!
தொடர்ந்து அச்சுறுத்தி வந்த முதலையை பொதுமக்கள் கொன்று சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
முதலைகள்
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கிராமத்தில் சமீபத்தில் வெள்ளம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்துள்ளது.
இந்நிலையில் 3.63 மீ நீளமுள்ள ஒரு உப்புநீர் முதலை பெய்ன்ஸ் ஆற்றிற்கு அருகில் வரும் பொதுமக்களை துரத்தி தொல்லை செய்துள்ளது. மேலும், அந்த பகுதியில் உள்ள தெருநாய்களை கொன்று தின்பதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
பிரச்னைக்கு தீர்வு
இதனால் கவலையடைந்த அப்பகுதி மக்கள் இந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவதாற்காக கலந்தாலோசித்து, முதலையை கொள்வது மட்டுமே தீர்வாகும் என முடிவெடுத்தனர்.
பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து முதலையை சுட்டுக் கொன்றுள்ளனர். இதனையடுத்து அருகிலிருந்த பழங்குடியினர் கிராமத்துக்கு கொல்லப்பட்ட முதலையை கொண்டு சென்று சமைத்து சாப்பிட்டுள்ளார்.