தன்னை தாக்க வந்த முதலையிடம் செருப்பைக் காட்டி ஓட விட்ட பெண் - வைரலாகும் வீடியோ
தன்னை தாக்க வந்த முதலையிடம் செருப்பைக் காட்டி ஓட விட்ட பெண்ணின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு ஆற்றில் 2, 3 முதலைகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அப்போது ஆற்றங்கரைக்கு மேல் ஒரு பெண் தன் வளர்ப்பு நாயுடன் வந்து நின்று வேடிக்கை பார்க்கிறார்.
பெண் வந்ததைப் பார்த்த ஒரு முதலை திடீரென ஆற்றில் சீறிட்டு பெண்ணை தாக்க விரைந்து வந்தது. முதலை வருவதைப் பார்த்த அப்பெண் தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி கையில் எடுத்து தட்டி முதலையைப் பார்த்து திட்டுகிறார். இதனையடுத்து தாக்க வந்த முதலை அங்கிருந்து திரும்பிச் செல்கிறது.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் தங்கள் வழக்கம் போல் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Even crocodiles know the power of the mother slipper. ?? pic.twitter.com/e9mK0XrahH
— Figen (@_TheFigen) September 10, 2022