முதலை வந்ததாக பரவும் வீடியோ உண்மையல்ல - ஆட்சியர் விளக்கம்

Flood Fake Video Crocodile
By Thahir Nov 28, 2021 04:20 PM GMT
Report

கூடுவாஞ்சேரி சாலையில் முதலை வந்ததாக பரவும் வீடியோ உண்மையல்ல செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக இன்று காலை முதலே செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

இதனால், சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என பல இடங்களில் மழை நீர் சூழந்து காணப்படுகிறது. நீர் நிலைகள் நிரம்பி காணப்படுகின்றன.

இந்த நிலையில், செங்கல்பட்டு அருகே உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் முதலை வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

வீடியோ ஒன்றும், புகைப்படம் ஒன்றும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பலரும் அது குறித்து பேசி இருந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் முதலை வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் சாலையில் முதலை வந்ததாக வெளியான வீடியோ தவறானது.

சாலையில் தண்ணீர் போகும் கால்வாயில் சுழற்சி காரணமாக மரக்கட்டை ஒன்று மிதந்தை முதலை என சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர் என்றார்.