மிக்ஜாங் கனமழை - சென்னையில் அசால்ட்டாக சுற்றும் முதலை...ஜஸ்ட் மிஸ்ஸான நபர்!!
சென்னையில் நேற்றிரவு முதலே அநேக இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது.
கனமழை
மிக்ஜாங் புயல் சென்னைக்கு அருகில் நிலைகொண்டுள்ளதால் நேற்றிரவு முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் அநேக இடங்களில் அதிகனமழை பெய்து வருகின்றது.
பெரும்பாலான இடங்களில் மழை நீர் சாலையில் தேங்கி நிற்கும் காட்சிகளும் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பயனாளிகள் பலர் வெளியிட்டு வருகின்றனர்.
முதலை
அப்படி ஒரு தான் தற்போது இணையத்தளத்தில் வெளியாகி பார்ப்போருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மழையை பொருட்படுத்தாமல் பலர் அத்தியாவசிய வேலைகளுக்காக வெளியே சென்று வருகின்றனர்.
அவ்வாறு பெருங்களத்தூர் - நெற்குன்றம் சிலர் பயணித்த போது, சாலையில் மிகப்பெரிய முதலை ஒன்று பொறுமையாக சாலையை கடந்து செல்லும் வீடியோ வெளியாகி இருக்கின்றது.
— Abhishek Bhatia (@AbhishekBh63159) December 4, 2023
பரபரப்பான இந்த சாலையில் முதலை செல்லும் போது, அதனை கவனிக்காமல் டெலிவரி ஊழியர் ஒருவர் எளிதாக கிராஸ் செய்து செய்கிறார்.