விமர்சிக்கும் தலைவர்களுக்கு அறிவு வேண்டும் - மத்திய அமைச்சர் எல்.முருகன்

DMK BJP Tiruchirappalli
By Thahir 2 மாதங்கள் முன்

விமர்சிக்கும் தலைவர்களுக்கு அறிவு வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை கைது செய்யுங்கள்

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இரண்டு நாட்களாக குறிப்பாக கோவை, திண்டுக்கல், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர், தாம்பரம், ஈரோடு ஆகிய பகுதிகளில் பாஜகவின் நிர்வாகிகள், இந்து இயக்கத்திற்காக வேலை செய்கின்ற நிர்வாகிகள் அவர்களுடைய வீடுகள், வாகனங்கள், தொழில் செய்யும் பகுதிகளை குறி வைத்து கடுமையான தாக்குதல் சம்பவங்களை ஒரு கும்பல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்க தக்கது. தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

விமர்சிக்கும் தலைவர்களுக்கு அறிவு வேண்டும் - மத்திய அமைச்சர் எல்.முருகன் | Criticizing Leaders Need Knowledge L Murugan

மேலும் பேசிய அவர், இரண்டு நாட்களுக்கு முன்னாள் நாடு முழுவதும் NIA சோதனை நடைபெற்றது. அந்த சோதனையில் தேசத்து எதிராக, நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக, அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் திமுகவின் செய்தி தொடர்பாளர் டி,கே.எஸ் இளங்கோவன் NIA தவறுதலாக பயன்படுத்தப்படுகிறது என்று கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக தேச பாதுகாப்பில் விளையாடக் கூடாது.

இது தேசத்தின் பாதுகாப்பு, திமுக ஓட்டு வங்கி அரசியலை செய்ய கூடாது. பாஜக, மற்றும் இந்து அமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றார்.

முழு வீடியோ