கருத்து சுதந்திரம் சிலருக்கு மட்டும் தானா? இளையராஜாவை இப்படி பேசலாமா ? - கொந்தளித்த தமிழிசை சவுந்தரராஜன்

ilayaraja Tamilisai Soundararajan
By Irumporai Apr 17, 2022 03:09 AM GMT
Report

பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா பேசியதற்கு கடும் சொற்களால் அவரைவிமர்சிப்பது சரியா என்று கேள்விஎழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியின் ஆட்சியைக் கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார்' என்று இசையமைப்பாளர் இளையராஜா பேசினார். அதாவது ,பிரதமர் மோடி, அம்பேத்கர் போன்று செயல்படுவதாக இளைராஜா பேசியதற்கு ,சமூக வலைதளங்களில் இளையராஜா மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், இசையமைப்பாளர் இளைராஜா மீது எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து தெலுங்கனா மாநில ஆளுநரும் புதுச்சேரி மாநில துணை  ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:

இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?

கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா?, தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே என்று  கூறியுள்ளார்.