பாமக நிர்வாகிகளை சமூக ஊடகங்களில் விமர்சித்தால் கடும் நடவடிக்கை: ராமதாஸ் எச்சரிக்கை

sociealmedia ramdas
By Irumporai Jun 17, 2021 10:26 AM GMT
Report

பா.ம.க. நிர்வாகிகளை சமூக ஊடகங்களில் விமர்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவர் இராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இது குறித்து இராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில்: பாட்டாளி மக்கள் கட்சி ஒழுங்குக்கும், கட்டுப்பாட்டுக்கும் பெயர் பெற்ற இயக்கம்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒரே குடும்பமாக பழகி வருபவர்கள் என்பது தான் நாம் பெருமைப்படும் விஷயமாகும்.

அண்மைக்காலமாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் சார்பு இயக்கங்களின் பொறுப்பாளர்களை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிடும் போக்கு தலைத்தூக்க தொடங்கியுள்ளது.

பா.ம.க. மற்றும் அதன் சார்பு அமைப்புகளின் பொறுப்பாளர்களை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதை மன்னிக்க முடியாத குற்றமாக நான் கருதுகிறேன்.

கட்சி  பொறுப்பாளர்கள் மீது  குறைகள் இருந்தால் அதை என்னிடம் தெரிவிக்கலாம். அதைவிடுத்து, சமூக ஊடகங்களில் கட்சிப் பொறுப்பாளர்களுக்கு எதிராக பதிவிட்டால்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவர் என்பதைக் கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.