‘அப்படி போஸ் குடுத்து ஃபோட்டோ போடுராங்க..அது தப்பில்லன்னா நான் பேசுறதும் தப்பில்ல’ - பயில்வான் ரங்கநாதன் பேட்டி
தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை கதாப்பாத்திரங்களிலும் காமெடி ரோல்களிலும் நடித்து பிரபல நடிகராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். பத்திரிக்கையாளராகவும் இருக்கும் இவர் சொந்த யூட்யூப் சேனலை நடத்தி வருகிறார்.
அந்த சேனலில் தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்த ரகசியங்கள், சினிமா அப்டேட்டுகள், நடிகர் நடிகைகளின் பெர்சனல் விஷயங்கள் என அனைத்தையும் பகிர்ந்து வருகிறார்.
பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் பற்றி அதிர்ச்சி அளிக்கும் செய்திகளையும் கடந்த காலங்களில் வெளியிட்டு இருக்கிறார். இவரின் யூடியூப் சேனலுக்கு தனி ஃபாலோவர்ஸ்களே உள்ளனர்.
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் பெண்களை பற்றி சமூக வலைதளங்கள் மற்றும் யூட்யூப் சேனல்களில் அவதூறாக பேசி வருவதாக கூறி திரைப்பட தயாரிப்பளர் சங்கம், தமிழர் மக்கள் இயக்கம் சார்பில் ராஜன், இயக்குநர் திருமலை உள்ளிட்டோர் இணைந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து பிளாக் மெயில் செய்து பணம் பறிப்பதாக தன் மீது பொய் புகார் அளித்துள்ள ராஜன் மீது புகார் தெரிவிக்க வந்த நடிகர் பயில்வான் ரங்கநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
செய்தியாலர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய ரங்கநாதன் ஒரே பதிலையே அழுத்தமாக திரும்ப திரும்ப கூறினார்.
அப்போது, தன்னுடைய புகைப்படத்தை நடிகை வெளியிடுவதில் தவறில்லையே, அதை பற்றி நீங்கள் ஏன் டீட்டைளாக, அறுவறுக்கத்தக்க வகையில் உங்களுடைய யூட்யூப் சேனலில் விமர்சிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு பதிலளித்த நடிகர் ரங்கநாதன் மாலத்தீவில் ஒரு நடிகை தனது புகைப்படங்களை பதிவிடுகிறார், அவர் அப்படி பதிவிடுவது தவறில்லை என்றால், அதை பற்றி நான் கருத்து தெரிவிப்பதும் தவறில்லை, அப்படி பதிவிடுவது அவரின் உரிமை என்றால், அதை பற்றி விமர்சிப்பது என்னுடைய உரிமை என்றார்.