மிக விமரிசையாக நடைபெற்றது கிறிஸ்தவர்களின் தவக்கால முக்கிய நிகழ்வு

event god christian lent
By Jon Mar 30, 2021 12:52 PM GMT
Report

கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான குருத்தோலை நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. கிறிஸ்தவ மக்களின் 40 நாட்கள் தவக்காலத்தில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறு பவணி நெல்லையில் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலையுடன் கலந்து கொண்டனர் கிறிஸ்தவர்களின் தவக்கால பண்டிகையான ஈஸ்டர் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது, அதன் ஒரு நிகழ்வாக தவக்காலத்தில் புனித வாரத்தின் தொடக்க விழாவாக குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டு வருகிறது.

இயேசு மனித குலத்தை மீட்பதற்கு ஜெருசேலம் நகருக்குள் நுழைவதை நினைவுபடுத்தும் விதமாக இந்த குருத்தோலை ஞாயிறு நடைபெறுகிறது. உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி இயேசுவே எங்களுக்கு உதவ வரும் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் ஓசானா என்ற வார்த்தையை உச்சரிக்கின்றனர்.

இயேசுவின் பிரதிநிதிகளாக ஆயரோடு குழுக்களாக தங்கள் கைகளில் குறுத்து ஓலைகளை எந்திக்கொண்டு ஆலயத்திற்கு சென்று, இயேசு சிலுவையில் பட்ட பாடுகளையும் இறப்பையும் தியானித்து இயேசுவின் உயிர்ப்பு நாளான ஈஸ்டர் பெருவிழாவை கொண்டாட தங்களை தயார்படுத்துகின்றனர்.

இதனையொட்டி பாளையங்கோட்டை புனித சவேரியார் பேராலயத்தின் சார்பில் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி புனித குழந்தை இயேசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி, புனித யோவான் கல்லூரி, வாட்டர் டேங்க் வழியாக புனித சவேரியார் பேராலயத்தில் சென்றடைந்தனர், பேரணியில் சென்றவர்கள் பிரார்த்தனை செய்து வழங்கப்பட்ட ஓலையுடன் ஓசனா பாடி சென்றனர்.

இறுதியாக பேராலயத்தில் குறுத்தோலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஈஸ்டர் வரை 7 நாட்கள் புனிதவாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் பெரிய வியாழன், புனிதவெள்ளி ஆகியவை அனுசரிக்கப்படுகிறது.