Wow... அரபி உடையணிந்து 'வாள் நடனம்' ஆடிய ரொனால்டோ - வைரலாகும் சூப்பர் வீடியோ....!
அரபி உடையணிந்து 'வாள் நடனம்' ஆடிய ரொனால்டோவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ
சர்வதேச கால்பந்து உலகில் உச்சபட்ச நட்சத்திர வீரர்களில் ஒருவராக கிறிஸ்டியானோ ரொனால்டோ வலம் வருகிறார். இவர் சமீபத்தில் சவுதி அரேபியா லீக் அணியான அல் நாசருடன் இணைந்து, தனது முதல் போட்டியிலேயே வெற்றியை கொடுத்தார்.
500 கோல்கள் அடித்து சாதனை படைத்த ரொனால்டோ
இதனையடுத்து, சவூதி ப்ரோ லீக் போட்டியில் அல் நாசர் அணிக்காக ரொனால்டோ தற்போது விளையாடிக் கொண்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் அல் நாசர் - அல் வெஹ்தா அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியில் ரொனால்டோ ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து 40வது நிமிடம் , 53வது நிமிடத்தில் கோல் அடித்து ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதன் பின்பு, 61வது நிமிடத்தில் கோல் அடித்து ரொனால்டோ, அல் நாசர் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறச் செய்தார்.
இப்போட்டியில் ரொனால்டோ அடித்த முதல் கோல் கிளப் போட்டிகளில் , அவரது 500வது கோலாகும். இதுவரை ரொனால்டோ கிளப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்காக 311 கோல்களை அடித்துள்ளார்.
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 103 கோல்களும், ஜுவென்டஸ் அணிக்காக 81 கோல்களும் அடித்து அசத்தியிருக்கிறார். தற்போது அல் நாசர் அணிக்காக 5 கோல்களுடன் மொத்தமாக 503 கோல்களை அடித்து மாபெரும் சாதனை படைத்திருக்கிறார்.
'வாள் நடனம்' ஆடிய ரொனால்டோ
இந்நிலையில், அரபி உடையணிந்து, அல் நசார் அணி வீரர்களுடன் இணைந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ 'வாள் நடனம்' ஆடியுள்ளார்.
ரொனால்டோ சவுதி அரேபியா நாடு உதயமான நாள் விழாவில், அரபி உடையணிந்து, அல் நசார் அணி வீரர்களுடன் இணைந்து ‘வாள் நடனம்’ ஆடினார்.
கையில் வாளேந்தி, வீரர்களுடன் ரொனால்டோ நடனமாடும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து, வைரலாக்கி வருகின்றனர்.
Happy founding day to Saudi Arabia ??
— Cristiano Ronaldo (@Cristiano) February 22, 2023
Was a special experience to participate in the celebration at @AlNassrFC ! pic.twitter.com/1SHbmHyuez
#VIDEO: Portuguese superstar @Cristiano Ronaldo celebrates the #Saudi Founding Day, donning traditional dress from the Kingdom and performing the ‘Ardha’ dance @AlNassrFC_EN pic.twitter.com/EWfNmPz7ow
— Saudi Gazette (@Saudi_Gazette) February 22, 2023
? Wearing Saudi uniform ??
— Niyi Daniels ? (@Niyiafrika02) February 22, 2023
Performing the famous "show" dance ?
The Legend Cristiano Ronaldo
Participating in our celebration of #foundationday ?
Traditional Thob suits him! ?? pic.twitter.com/cSpTc7qEJS