மனைவி கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு; ஆடிப்போன ரொனால்டோ - வைரல் வீடியோ!

Cristiano Ronaldo Football
By Sumathi Dec 27, 2022 04:19 AM GMT
Report

கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு அவரது மனைவி புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரை கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கியுள்ளார்.

ரொனால்டோ

கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம் வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ(37). சிறந்த வீரர்களுக்கென வருடாவருடம் வழங்கப்படும் 'Golden foot' விருதை மட்டும் 5 முறை வென்றுள்ளார். சர்வதேச கால்பந்து அரங்கில் 800 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தவர்.

மனைவி கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு; ஆடிப்போன ரொனால்டோ - வைரல் வீடியோ! | Cristiano Ronaldo Partner Georgina Rodriguez Gifts

தற்போது நடைபெற்று முடிந்த FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் கால்யிறுதிப் போட்டியில் தோற்றதால் அவரது உலகக்கோப்பை கனவு தகர்ந்தது. தொடர்ந்து, மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேற்றப்பட்டார்.

மனைவி பரிசு

இந்நிலையில், இவருக்கு அவரது மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரைப் கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த காரின் மதிப்பு 2. 50 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.