ரொனால்டோவின் சாதனையை முறியடித்த லயோனல் மெஸ்ஸி - வெளியான மாஸ் தகவல்...!
இன்ஸ்டாகிராமில் ரொனால்டோவின் சாதனையை லயோனல் மெஸ்ஸி முறியடித்துள்ளார்.
இன்ஸ்டாவில் சாதனைப் படைத்த மெஸ்ஸி
நேற்று முன்தினம் உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்துள்ளது.
நேற்று முன்தினம் இரவிலிருந்து அர்ஜென்டினாவின் வெற்றியை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அன்றிலிருந்து கொண்டாடத்தில் ஈடுபட பியூனஸ் அயர்ஸ் நகரத்தில் கோடிக்கணக்கான மக்கள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
நாளை அர்ஜென்டினாவில் வெற்றியை கொண்டாட அந்நாட்டு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. சமூகவலைத்தளங்களில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மெஸ்ஸியை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் 50 மில்லியன் லைக்குகளை எட்டி லயோனல் மெஸ்ஸி சாதனைப் படைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் வரலாற்றில் எந்த விளையாட்டு வீரராலும் அதிகம் விரும்பப்பட்ட புகைப்படமாக மெஸ்ஸி புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்த சாதனை கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முந்தைய சாதனையான 42 மில்லியன்களை முறியடித்துள்ளது.
Lionel Messi now holds the record for the fastest Instagram post ever to reach 50 million likes.
— FIFA World Cup Stats (@alimo_philip) December 20, 2022
That makes it the most-liked photo by any athlete in Instagram history.
It surpasses Cristiano Ronaldo's previous record of 42 million.#FIFAWorldCup|#Messi?|#GOAT? pic.twitter.com/RJAuACYsCU