Wow... விண்ணை பிளந்த வாணவேடிக்கை... - அறிமுக நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் முன் தோன்றிய ரொனால்டோ...!
சவுதி அரேபியாவில் ‘அல் நசார்’ கால்பந்து அணியின் அறிமுக நிகழ்ச்சிக்கு கெத்தா வந்த ரொனால்டோவைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
இடைநீக்கம் செய்யப்பட்ட ரொனால்டோ
மான்செஸ்டர் யுனைடெட் தனது ஒப்பந்தத்தை ரத்து செய்தபோது ரொனால்டோ ஒரு இலவச முகவராக இருந்தார், அவர் மேலாளர் எரிக் டென் ஹாக் மற்றும் கிளப்பின் உரிமையாளர்களை விமர்சித்தார்.
இதனையடுத்து, தற்காலிகமாக ரொனால்டோ இடைநீக்கம் செய்யப்பட்டார். நடைபெற்று முடிந்த உலக கோப்பை கால்பந்து போட்டி காலிறுதியில் மொராக்கோவிடம் போர்ச்சுகல் தோற்றதால் கண்ணீருடன் களத்தை விட்டு வெளியேறினார் ரொனால்டோ.
கிளப் அல் நாசருடன் ஒப்பந்தம்
இதனையடுத்து, ரொனால்டோ, சவுதி அரேபிய கிளப் அல் நாசருடன் இரண்டரை வருட ஒப்பந்தத்தில் சமீபத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் ஜூன் 2025 வரை நீடிக்கும். இந்திய மதிப்பில் ரூ.1,770 கோடி ஆண்டு சம்பளத்திற்கு ரொனால்டோவை அல் நஸர் கிளப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ரசிகர்கள் முன் தோன்றிய ரொனால்டோ
இந்நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோவை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அல் நஸர் அணியின் T.Shirtடை அணிந்து ரசிகர்கள் முன் ரொனால்டோ மாஸாக தோன்றினார். அப்போது, சவுதி அரேபியா ரசிகர்கள் விண்ணை பிளக்கும் அளவிற்கு ஆரவாரம் செய்தனர்.
ஐரோப்பா, தென் அமெரிக்கா உள்ளிட்ட லீக் போட்டிகளில் ரொனால்டோ கால்பந்து விளையாடி இருந்தாலும், ஆசியாவைச் சேர்ந்த அணிக்காக ரொனால்டோ முதல்முறையாக விளையாட இருக்கிறார். கிறிஸ்டியானோ ரொனால்டோ முதன்முறையாக அல்-நாசர் ரசிகர்களுக்கு முன்பாக வெளியேறினார்
Cristiano Ronaldo’s new home ??
— B/R Football (@brfootball) January 3, 2023
(via @AlNassrFC_EN)pic.twitter.com/gkWah5iB4L
Hate him all you want in media, Cristiano Ronaldo will forever own the streets. pic.twitter.com/mkCHQViDkb
— Murtaza (@MurtazaBall) January 4, 2023
Cristiano Ronaldo's reception attracted the attention of the whole world more than the World Cup in Qatar. Who agrees with me? pic.twitter.com/whGu4nzjfd
— Fahad Alotaibi (@FahadAlhero) January 3, 2023