அடேங்கப்பா... ஒரு மணி நேரத்திற்கு ரொனால்டோவிற்கு இத்தனை கோடி சம்பளமா? - வாயை பிளந்த ரசிகர்கள்...!

Cristiano Ronaldo Football
By Nandhini Jan 23, 2023 10:17 AM GMT
Report

சவுதி அரேபியா லீக் அணியான அல் நாசருடன் இணைந்துள்ள ரொனால்டோவிற்கு ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் வெளியாகி உலக ரசிகர்களை வாயை பிளக்க வைத்துள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

சர்வதேச கால்பந்து உலகில் உச்சபட்ச நட்சத்திர வீரர்களில் ஒருவராக கிறிஸ்டியானோ ரொனால்டோ வலம் வருகிறார். இவர் தற்போது சவுதி அரேபியா லீக் அணியான அல் நாசருடன் இணைந்து, தனது முதல் போட்டியிலேயே வெற்றியை கொடுத்துள்ளார்.

cristiano-ronaldo-foot-ball-sports

ஒரு மணி நேரத்திற்கு சம்பளம்

இந்நிலையில், ரொனால்டோவுக்கு சவூதி அரேபியா கொடுத்து வரும் சம்பளம் மற்றும் சலுகைகள் குறித்த தகவல் தற்போது வெளியாகி உலக மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

கால்பந்து விளையாட்டு பிரபலங்களுக்கு ஒரு நாள் அல்லது ஒரு மணி நேரத்திற்கான சம்பளம் வழங்கப்படுவது வழககம். ஆனால், ரொனால்டோவிற்கு ஒரு நொடிக்கான சம்பளமே நம் இந்திய மதிப்பின்படி ரூ.588 தரப்படுகிறதாம்.

இதை கணக்குப்போட்டு பார்த்தால் ஒரு மணி நேரத்துக்கு ரொனால்டோவின் சமபளம் ரூ.144 கோடியாம். இதே வருடத்திற்கு பார்த்தால், 200 மில்லியன் டாலர் சம்பளத்தை சவூதி நாடு அவருக்கு வழங்கி, உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரொனால்டோதான் உலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக உருவெடுத்துள்ளார்.