500 கோல்கள் அடித்து மாபெரும் சாதனை படைத்த ரொனால்டோ... - குவியும் வாழ்த்துக்கள்...!
500 கோல்கள் அடித்து மாபெரும் சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனைப் படைத்துள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ
சர்வதேச கால்பந்து உலகில் உச்சபட்ச நட்சத்திர வீரர்களில் ஒருவராக கிறிஸ்டியானோ ரொனால்டோ வலம் வருகிறார். இவர் சமீபத்தில் சவுதி அரேபியா லீக் அணியான அல் நாசருடன் இணைந்து, தனது முதல் போட்டியிலேயே வெற்றியை கொடுத்தார்.
500 கோல்கள் அடித்து சாதனை படைத்த ரொனால்டோ
இதனையடுத்து, சவூதி ப்ரோ லீக் போட்டியில் அல் நாசர் அணிக்காக ரொனால்டோ தற்போது விளையாடிக் கொண்டு வருகிறார். நேற்று நடைபெற்ற போட்டியில் அல் நாசர் - அல் வெஹ்தா அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் ரொனால்டோ ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.
இதைத்தொடர்ந்து 40வது நிமிடம் , 53வது நிமிடத்தில் கோல் அடித்து ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து 61வது நிமிடத்தில் கோல் அடித்து ரொனால்டோ, அல் நாசர் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறச் செய்தார்.
இப்போட்டியில் ரொனால்டோ அடித்த முதல் கோல் கிளப் போட்டிகளில் , அவரது 500வது கோலாகும். இதுவரை ரொனால்டோ கிளப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்காக 311 கோல்களை அடித்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 103 கோல்களும், ஜுவென்டஸ் அணிக்காக 81 கோல்களும் அடித்து அசத்தியிருக்கிறார். தற்போது அல் நாசர் அணிக்காக 5 கோல்களுடன் மொத்தமாக 503 கோல்களை அடித்து மாபெரும் சாதனை படைத்திருக்கிறார்.
Great feeling to have scored 4 goals and reaching my 500th league goal in a very solid win by the team!??
— Cristiano Ronaldo (@Cristiano) February 9, 2023
⚽️⚽️⚽️⚽️ pic.twitter.com/o2ZfV6fYBu