இப்ப வந்து மோதுடா கிட்ட வந்து பாருடா : FIFA 2022 உலககோப்பையில் ரொனால்டோ புதிய சாதனை
2022 பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டித்தொடரில் நேற்று நடைபெற்ற குரூப் பிரிவு போட்டியில் போர்ச்சுகல் அணி மற்றும் கானா அணி மோதியது , இந்த போட்டியில் ரொனால்டோ புதிய சாதனை படைத்துள்ளார்.
ரொனால்டோ புதிய சாதனை
குரூப் எச் பிரிவில் நடைபெற்ற போட்டியில் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி கானா அணியுடன் மோதியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கமால் இருந்த போது ஆட்டத்தின் 65ஆவது நிமிடத்தின் போது ரொனால்டோவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த பெனால்டியை ரொனால்டோ கோலாக மாற்றினார்
Out of this world ??
— FIFA World Cup (@FIFAWorldCup) November 24, 2022
? Cristiano Ronaldo becomes the first man to score at five FIFA World Cups#FIFAWorldCup | @Cristiano pic.twitter.com/3UKqXLsZWd
ஒருகோல் புதிய சாதனை
இந்த போட்டியில் ரொனால்டோ அடித்த கோல் மூலம் புதிய உலக சாதனையை அவர் புரிந்துள்ளார். இந்த கோல் மூலம் ஐந்து உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமை ரொனால்டோ பெற்றுள்ளார்.
37 வயதான ரொனால்டோ 2006,2010,2014, 2018, 2022 ஆகிய ஐந்து உலகக் கோப்பை தொடர்களிலும் ரொனல்டோ கோல் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.