ரசிகரின் மொபைல் போனை தட்டிவிட்ட ரொனால்டோ - ₹50 லட்சம் அபராதம் விதிப்பு...!

Cristiano Ronaldo Football
By Nandhini 1 வாரம் முன்

ரசிகரின் மொபைல் போனை தட்டிவிட்ட காரணத்திற்காக ரொனால்டோவிற்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

கிறிஸ்டியானோ ரொனால்டோ

கால்பந்து விளையாட்டில் ஜாம்பவனாக வலம் வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருடைய விந்தையான கால்பந்து விளையாடும் ஸ்டைல் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும்.

சமீபத்தில் கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக க்ளப் அணிக்காக 700 கோல்களை அடித்து புதிய மைல் கல்லை எட்டினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவரின் சாதனைக்கு அவரது ரசிகர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். 

cristiano-ronaldo-fined-rs-50-lakh-fan-phone

ரொனால்டோ வெளியேற்றம்

நேற்று மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியிலிருந்து நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறினார். இத்தகவலை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மான்செஸ்டர் அணியின் மேலாளரை நான் மதிப்பதே கிடையாது. அவர் மீது நான் மரியாதை வைத்தது இல்லை என்று சமீபத்தில் ரொனால்டோ கூறியிருந்த நிலையில், இருதரப்பினருக்கும் விரிசல் அதிகமானது குறிப்பிடத்தக்கது.

ரூ.50 லட்சம் அபராதம்

இந்நிலையில், ரசிகரின் கையில் இருந்த மொபைல் போனை தட்டிவிட்டதற்காக ரொனால்டோவிற்கு ரூ.50 லட்சம் அபாரதமும், 2 கிளப் ஆட்டத்தில் விளையாடத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கடந்த ஏப்ரலில் நடைபெற்றது. தற்போது அவர் மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து வெளியேறிய நிலையில், அடுத்து அவர் இணையும் கிளப்ல் இந்தத் தடை தொடரும் என்று சொல்லப்பட்டுள்ளது.