அதிக கோல் அடித்து சாதனையை சமன் செய்த ரொனால்டோ

Christiano ronaldo Record break
By Petchi Avudaiappan Jun 24, 2021 11:48 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கால்பந்து
Report

கிறிஸ்டியானா ரொனால்டோ சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை சமன் செய்துள்ளார்.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில், இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில், நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி, உலகக் கோப்பை சாம்பியன் பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது.

இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இப்போட்டியில் போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிக் வாய்ப்பின் மூலம் இரண்டு கோல்களை அடித்தார்.

இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த ஈரான் வீரர் அலி டெய் சாதனையை அவர் சமன் செய்தார்.