கால்பந்து அரங்கில் '801' கோல் அடித்து தெறிக்கவிட்ட ரொனால்டோ

trending football goal leading ronaldo cristiano reaches 801
By Fathima Dec 08, 2021 01:08 PM GMT
Report

கால்பந்து அரங்கில் 800 கோல் அடித்து அசத்தினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 36. கிளப் அரங்கில் தற்போது மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடுகிறார்.

பிரிமியர் லீக் தொடரில் ஆர்சனல் அணிக்கு எதிரான போட்டியில் மான்செஸ்டர் அணி 3-2 என வெற்றி பெற்றது.

இதில் ரொனால்டோ, 52வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இது கால்பந்து அரங்கில் ரொனால்டோ அடித்த 800வது கோலாக அமைந்தது.

தவிர 70 வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் ஒரு கோல் அடித்து உதவினார்.

தவிர ஒட்டுமொத்தமாக அதிக கோல் அடித்த வீரர்களில் ரொனால்டோ தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

இவர் 2002ல் முதன் முதலில் ஸ்போர்ட்டிங் அணிக்காக 17 வயதில் முதல் கோல் அடித்தார்.

தற்போது 19 ஆண்டுகளில் ஸ்போர்டிங் (5), மான்செஸ்டர் யுனைடெட் (130), ரியல் மாட்ரிட் (450), யுவண்டஸ் (101), போர்ச்சுகல் (115) அணிகளுக்காக மொத்தம் 1095 போட்டிகளில் 801 கோல் அடித்துள்ளார்.

இவரது கோல் சராசரி 1.36 கோல் ஆக உள்ளது.

அதிகாரப்பூர்வ போட்டியில் அதிக கோல் அடித்த டாப்-5 வீரர்கள்: 

ரொனால்டோ, போர்ச்சுகல்- 686115801

பீலே, பிரேசில்- 68277769

மெஸ்சி, அர்ஜென்டினா- 67680756

ரொமாரியோ, பிரேசில்- 68964753

புஸ்காஸ், ஹங்கேரி- 64584729