கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக மாபெரும் சாதனைப் படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ...! குவியும் வாழ்த்து
கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக கிறிஸ்டியானோ ரொனால்டோ மாபெரும் சாதனைப் படைத்துள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ
கால்பந்து விளையாட்டில் ஜாம்பவனாக வலம் வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருடைய விந்தையான கால்பந்து விளையாடும் ஸ்டைல் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும்.
சமீபத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பிய பிறகு முதல் ஹாட்ரிக் கோல்களை அடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 807 கோல்களை அடித்து கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராக மகுடம் சூட்டப்பட்டு, சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஓல்ட் ட்ராஃபோர்டில் ரொனால்டோவின் 12-வது நிமிட தொடக்கத்தில் தூரத்திலிருந்து அடிக்கப்பட்ட கோல் இந்த சாதனைக்கு வித்திட்டது.
வரலாற்று சாதனை
இந்நிலையில், தற்போது கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக க்ளப் அணிக்காக 700 கோல்களை அடித்து புதிய மைல் கல்லை எட்டியிருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. சமூகவலைத்தளங்களில் இவரின் சாதனைக்கு அவரது ரசிகர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
CRISTIANO RONALDO SCORES HIS 700TH CAREER CLUB GOAL ? pic.twitter.com/tqfSLp0o8r
— B/R Football (@brfootball) October 9, 2022