ஆளும் கட்சி பற்றி கவலை இல்லை - ராகுல்காந்தியின் யாத்திரை கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு
ராகுல் காந்தியில் இந்திய ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார்.
ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையானது கன்னியாக்குமரியில் தொடங்கி காஷ்மீர் வரையிலான பாத யாத்திரை நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசனும் டெல்லியில் இன்று யாத்திரையில் கலந்துகொண்டார்.
தமிழில் பேசிய கமல்ஹாசன்
அப்போது யாத்திரையில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன் ராகுல்காந்தியின் தேசிய ஒற்றுமை பயணத்தில் 2 கொள்ளுப்பேரன்கள் இணைந்து நடக்கிறோம். அரசியலமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன்.

எனது அரசியல் பயணம் மக்களுக்காக தொடங்கியது எனக்காக அல்ல" என்று தெரிவித்தார். அப்போது இடைமறித்த ராகுல் காந்தி தமிழர்கள் இங்கு இருக்கிறார்கள், ஆகையால் நீங்கள் தமிழ் பேசுங்கள் என்று கமல் ஹாசனிடம் கோரிக்கை வைத்தார்.
பின்னர் தமிழில் பேசிய கமல்ஹாசன் எந்தவொரு நெருக்கடி நம் அரசிலமைப்புக்கு வந்தாலும் நான் தெருவில் வந்து நிற்பேன். எந்த கட்சி ஆள்கிறது என்பது பற்றி எனக்கு கவலையில்லை.

நான் அதற்காகவே இங்கு வந்திருக்கிறேன். நான் முதலில் ஆங்கிலத்தில்தான் பேசுவதாக இருந்தேன், சகோதரர் கோரிக்கையால் தமிழில் பேசுகிறேன். நான் இங்கு வருவதற்கு முன்பு பல பேர் என்னிடம் சொன்னார்கள்.
இது எனக்கான நேரம்
நான் ஒரு கட்சியின் தலைவன், நீங்கள் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டால் உங்கள் அரசியல் வாழ்க்கை பாதிக்கும் என தெரிவித்தார்கள். அப்போது நான் சொன்னேன் எனது அரசியல் பயணம் மக்களுக்காக தொடங்கியது எனக்காக அல்ல.
நம் பாரதத்தின் கடந்தகால நேர்மையை நாளைய நம் வளமையை நோக்கி வழிநடத்தும் பயணம் இது என்றே நான் உணர்கிறேன் @RahulGandhi @maiamofficial #BharatJodoYatra #MakkalNeedhiMaiam pic.twitter.com/Pm9iypT2IK
— Kamal Haasan (@ikamalhaasan) December 24, 2022
நான் கண்ணாடி முன் நின்று எனக்குள் சொல்லிக் கொண்டேன் - இது நாட்டுக்கு என்னை மிகவும் தேவைப்படும் நேரம். அப்போது எனக்குள் இருந்து ‘கமல் இந்தியாவை உடைக்க உதவாதீர்கள், ஒன்றிணைய உதவுங்கள் என்று தெரிவித்தார்.