தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்ட பெண்ணுக்கு நிகழ்ந்த கதி

பிரேசிலில் தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்ட பெண் விவாகரத்து செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வாழ்க்கையில் சிலர் வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என நினைத்து உலக மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவார்கள். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு இளைஞர், அரிசி வேக வைக்கும் குக்கரை கல்யாணம் செய்து கொண்டார்.. இது தொடர்பான போட்டோவையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட அது வைரலானது. 

குக்கர் நான் சொல்வதை எல்லாம் கேட்கிறது.. குக்கர் வெள்ளையாக இருக்கிறது.. எனக்கு சாப்பாடு வேகவைத்து தருகிறது.. என்னிடம் அன்பாக இருக்கிறது என மாப்பிள்ளை சொன்ன காரணம் தான் இதுவரை திருமணம் ஆகாத இளம் வயதினரை திக்குமுக்காட வைத்தது. 

அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் பிரேசில் நாட்டின் மாடல் அழகியான கிறிஸ் கலேரா என்பவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார். 31 வயதான அவர் எனக்கு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை.ஆனால், எந்த ஒரு ஆண்மகனும் தனக்கு திருமணம் செய்ய கிடைக்கவில்லை.அதேசமயம் எனக்கு தனித்து வாழவும் கொஞ்சம் பயமாக இருந்தது.ஆனால் அதுவே இப்போது பழகி விட்டது.அதனால் நானே என்னை பார்த்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்துவிட்டேன். அதற்காக நானே என்னை திருமணம் செய்து கொண்டேன்  என விளக்கமளித்தார். 

ஆனால் கல்யாணம் நடந்து 90 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், தன்னை தானே கிறிஸ் கலேரா டைவர்ஸ் கேட்டுள்ளார். தனக்கு இப்போது காதல் மீது நம்பிக்கை வந்துவிட்டதாகவும், என்னுடைய கனவு மனிதரை சந்தித்துவிட்டேன்.. அவரை பார்த்தபிறகுதான் இந்த நம்பிக்கை எனக்குள் வந்தது.. அதனால், நான் என்னை திருமணம் செய்து கொண்டதை விவாகரத்து செய்கிறேன் என கூறியுள்ளார். 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்